பயணிகளுடன் பேருந்துகளை கொளுத்தியதே காவல்துறை!

இந்திய தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், பேருந்துகளுக்கு தீ வைத்தது காவல்துறையினர் தான் என டெல்லி துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று டிசம்பர் 15ம் திகதி டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர்கள் மீது பொலிசார் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஜாமியா மில்லியா மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதே சமயம் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல் போர்க்களமாக மாறியது.


​​சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோக்கள் ஒன்றில், பொலிசார் பேருந்தில் எதையோ ஊற்றுவதை காட்டியது. மோதல்களில் பல பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்தன.

ட்விட்டரில் – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட பலர், காவல்துறையினரில் சிலர் காழ்ப்புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம் மற்றும் அவர்களே பேருந்திற்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தனர். எவ்வாறாயினும், காவல்துறை இதற்கு கடுமையான மறுப்பை வெளியிட்டது.

இந்த புகைப்படத்தைப் பாருங்கள் … பேருந்துகள் மற்றும் கார்களை யார் தீக்குளிக்கிறார்கள் என்று பாருங்கள் … இந்த புகைப்படம் பாஜகவின் கேவலமான அரசியலுக்கு மிகப்பெரிய சான்று … இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க முடியுமா? என சிசோடியா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.