போயிங் ரக விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்!
இரு மிகப்பெரிய விமான விபத்துகளுக்கு வித்திட்ட சர்ச்சைக்குரிய 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்புகளை தற்காலிகமாக நிறுத்த போயிங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இதன் தயாரிப்புகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும், 737 மேக்ஸ் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால் அதன் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதன் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போயிங் நிர்வாகிகள் எதிர்பார்த்ததை விட நெருக்கடியிலிருந்து நிறுவனத்தின் மீட்பு நீண்ட காலத்திற்கு ஆகும் என்பதாலும், போயிங்கின் நிலைத்தன்மை மீது சந்தேகம் உருவாவதால், முதலீட்டாளர்கள் இடையே இது கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும் தனது தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்குவதாக நிறுவனம் கூறியது, ஆனால் இந்த முடிவு காரணமாக, ஜெட் விமானங்களுக்கு உற்பத்தி பாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாங்கள் எதிர்பார்த்ததை விட மேக்ஸ் சேவை நிறுத்தப்படுவது தொடர்ந்தால் எங்கள் உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து மதிப்பீடு செய்வோம் என்று நாங்கள் முன்னரே கூறியுள்ளோம்.
அதன்படியே ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு தயாராக இருக்கும் விமானங்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம், அடுத்த மாதம் தொடங்கி 737 மேக்ஸ் விமான உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக பார்க்கபடும் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஜெட் விமானட்ஙகள் பறக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதியை பெற திட்டமிட்டுள்ளதாக போயிங் நீண்ட காலமாக கூறியிருந்தாலும், 2020ஆம் ஆண்டிற்க்கு முன்னர் ஜெட் விமானங்கள் சேவைக்கு திரும்புவதை அங்கீகரிக்க முடியாது என்று அமெரிக்க போக்குவரத்துக் கழகம் கூறிவிட்டது.
இதனால், குறித்த ரக விமானங்கள் மீதான தடைகள் நீடிக்கும் என்பதால், இதன் தயாரிப்புகளை நிறுத்த இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் சுமார் 300இற்க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த ரக விமானத்தில்; புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாலேயே இவ்விபத்துக்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
மார்ச் மாதத்திலிருந்து போயிங்கின் செயற்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்கள், அமெரிக்க பொருளாதாரத்தை பாதித்து, அமெரிக்க உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நீடித்த பொருட்களின் விற்பனையை குறைத்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை