தனியார் கல்வி நிலையங்களே!
கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை விடுமுறை நாட்களில் தங்களது கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் போது ஒரே காலப்பகுதியில் விடுமுறையினை வழங்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமும், அவசியமுமாகும்.
ஒரு குடும்பத்தில் உயர்தரம் படிக்கிற பிள்ளை ஒரு ரியூசனிலும், இடைநிலை பிள்ளை பிரிதொரு ரியூசனிலும் கல்வி கற்கின்ற போது இரண்டு ரியூசன்களும் வெவ்வேறு காலங்களில் விடுமுறையினை வழங்கினால் அந்த குடும்பம் பிள்ளைகளுடன் ஒன்றாக விடுமுறையினை கழிப்பதற்கோ, ஒன்றாக உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லவோ முடியா நிலை காணப்படுகிறது. இதேவேளை ஒரு பிள்ளையை விட்டுவிட்டும் செல்ல முடியாது.
தனியார் கல்வி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்க பெற்றோர்கள் தாங்களாகவே விடுமுறை எடுத்துச் சென்றால் அந்த பிள்ளைகள் முழு மனதுடன் அந்த பயணத்தை அனுபவிக்கப் போவதில்லை. அந்த சில நாட்களில் பாடத்திட்டங்கள் சில படிபிக்கப்பட்டுவிடும், சேர் பேசுவார் இப்படி பிரச்சினைகளை மனத்திற்கு போட்டுக்கொண்டு பிள்ளையால் அவ்வாறு செல்கின்ற விடுமுறையினை மகிழ்வாக கழிக்க முடியாது.
எனவே தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் என்பதனை பெயரளவில் வைத்துக்கொள்ளாது, அல்லது அதனை தங்களின் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தாது இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு கூட்டுத் தீர்மானங்களை எடுத்து கிளிநொச்சியில் இயங்குகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் பாடசாலை விடுமுறை நாட்களில் தாங்களும் ஒரே காலப்பகுதியில் விடுமுறையினை வழங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் செய்வீர்களா?

கருத்துகள் இல்லை