இரவோடு இரவாக யாழில் களமிறங்கிய அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


இந்த செயற்பாடு கிழக்கு அரியாலை பூம்புகார் பகுதியிலேயே அதிகளவு இடம்பெற்று வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும் முகாமாக நேற்றிரவு குறித்த பிரதேசத்திற்கு பாரிய சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்...

மண் ஏற்றி செல்வதற்கு விதிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில், அனுமதிப் பத்திரத்தின் நிபந்தனைக்கு முரணான வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பூம்புகார் பகுதிக்குள் இரவு நேரம் நுழைய முற்பட்ட பல உழவு இயந்திரங்கள் பொலிஸாரை கண்டதும் தலைதெறிக்க தப்பி சென்றுள்ளன.

இச் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணாண்டோ தலைமையில் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரும் இணைந்திருந்தனர்.

நேற்று முன்தினம் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் பெக்கோ வாகனம் உட்பட டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இதில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய நால்வரும் தங்கள் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீதிவான் பீற்றர் போல் தலா 1இலட்சம் ரூபா அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.