துருக்கி படையினரின் இன அழிப்பைத் தடுக்கமாறு குர்து படை தளபதி வேண்டுகோள்!!

சிரியாவில் குர்து பகுதியில் துருக்கி படையினர் மேற்கொண்டுள்ள இன அழிப்பைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு குர்து படை தளபதி மஸ்லூம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


துருக்கியினால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படும் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, துருக்கி படையினர் உக்கிர தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், குர்து படை தளபதி மஸ்லூம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி துருக்கி செயற்பட வலியுறுத்த வேண்டும். சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள குர்துகளை வெளியேற்ற துருக்கி செய்யும் பிரச்சாரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்கு நடைபெறும் இன அழிப்பைத் தடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு சிரியாவில் உள்ள தங்கள் எல்லை பகுதியில் இருந்து குர்து இன கிளர்ச்சியாளர்களை வெளியேற்றி, பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 இலட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக தற்போது, துருக்கியினால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படும் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் நண்பனாக செயற்பட்டது. ஆனால், நெருக்கடியான நேரத்தில் அதாவது, இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் அமெரிக்கா திரும்ப பெற்றது.

அத்தோடு, துருக்கியினால் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படும் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, துருக்கி இராணுவம் நடத்தவுள்ள தாக்குலுக்கு தாம் பொறுப்பேற்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்தது.

துருக்கி பிரதமர் தாக்குதலைப் பற்றி அறிவித்த அடுத்த நாளே அமெரிக்க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தினை அமெரிக்கா, தனக்கு முதுகில் குத்திய ஒரு துரோகமாக குர்து இனம் பார்க்கின்றது.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி இராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.