வடகொரியாவுக்கு உதவும் ஐ.நா.வின் தீர்மானம் – அமெரிக்கா கடும் எதிர்ப்பு!!
வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தக் கோரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் வரைவுத் தீர்மானத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்-ஐ சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசியபோது, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவது என இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனர்.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ட்ரம்ப் உறுதியுடன் உள்ளார். மேலும், இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண்பதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. எனினும், இது அமெரிக்காவின் கையில் மட்டும் இல்லை. வட கொரியாவும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தச் சூழலில், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. தளர்த்துவது அவசரகதியில் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். பதற்றத்தைத் தூண்டும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக வட கொரியா மிரட்டி வரும் நிலையில் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது சரியல்ல” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்காக ரஷ்யா மற்றும் சீனாவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட வரைவுத் தீர்மானம், சபையின் உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது.
அதில், வடகொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு ஜவுளிப் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வட கொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும், இந்த மாதம் 22ஆம் திகதிக்குள் அவர்கள் பணிபுரியும் நாடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அந்த வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்து வந்தது. அதற்குப் பதிலடியாக ஐ.நா. பாதுகாப்புச் சபையும் அமெரிக்காவும் அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை