சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம் குறித்து வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தினேஸ்!!
சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டின் தேசிய சட்டம் மற்றும் அனைத்துலக நீதி நியமங்களுக்கு இணங்கவே இலங்கை செயற்படுவதாகவும் அதற்கு மாறாக இடம்பெறுவதான எந்தவொரு கூற்றும் தவறானது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் தொடர்பான விசாரணையின் நிலை குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் நேற்று (புதன்கிழமை) மாலை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது சம்பவம் குறித்து முதன்முதலில் முறைப்பாடு கூறப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சருக்கு விரிவாக எடுத்துக்கூறிய தினேஸ் குணவர்தன, ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நல்லுறவுகளை கருத்திற்கொண்டு, இந்த செயன்முறையை விரைவுபடுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் விரிவுபடுத்துமாறு சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நாட்டின் சட்டத்தின்படி இலங்கை அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். அவருக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவரின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை