பிரபல சின்னத்திரை நடிகர் வீட்டில் பூகம்பம்!!

சின்னத்திரை ஜோடியான ஈஸ்வர் - ஜெயஸ்ரீ விவகாரம் பயங்கர பரபரப்புடன் சென்று கொண்டிருந்த தருணத்தில், தற்போது சின்னத்திரை நடிகரான அஸீம் குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டிச் சிங்கம் என்று பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் அஸீம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு Syed Zoya என்ற பெண்ணை வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சில ஆண்டுகள் நன்றாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் தற்போது பூகம்பம் வெடித்துள்ளதாம்.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் தற்போது பிரச்சினையாகியுள்ளதாக அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து டெக்னீஷியன் ஒருவர், இனிமேல் சமாதானம் ஆவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸீம் மீது தான் பிரச்சினை என்றும், குறித்த பெண் மீது பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் இவரது நடவடிக்கை சரியில்லை என்பதால் தான் பிரபல ரிவி சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி வேறொரு சீரியிலில் நடித்த போது புதுமுகமாக வந்த பெண்ணிடம் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாம். குறித்த புதுமுக நடிகை பள்ளி சென்று கொண்டிருந்தவராம். இதில் சிறந்த புதுமுக ஜோடி என்று விருது கொடுத்ததாகவும் குறித்த டெக்னீஷியன் கூறியுள்ளார்.

இவ்வாறு விருது வழங்கியதிலிருந்து இவர்களது வீட்டில் ஆரம்பித்த பிரச்சினை, இறுதியில் படப்பிடிப்பு தளம் வரை வர ஆரம்பித்துவிட்டதாகவும், அஸீம் அவரது மனைவியை அதிகமாக கொடுமைப்படுத்தி வருகின்றார் என்று கூறியுள்ளார்.

பின்பு சீரியலில் நடித்த மற்ற நபர்கள் கூறுகையில், ஆரம்பத்தில் ஒரு சீரியலில் ஜோடியாக நடித்தவருடன் தான் தற்போது ஜோடியாக நடிப்பேன் என்று பிடிவாதம் செய்து அடுத்த சீரியலை வாங்கியுள்ளாராம். மறுபடியும் பெண் விடயத்தில் பிரச்சினை ஏற்படுவதாக தெரிந்த நிலையில், அஸீம் மாமனார் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் குறித்த நடிகையை சில மாதங்களிலேயே தொடரிலிருந்து வெளியேற்றிவிட்டார்களாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர் அஸீமுடன் கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. இது வதந்தி என்று முடித்துவிட்டாராம்.

அவரது மனைவி ஸோயாவிடம் கேட்டதற்கு, எங்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை இருப்பது உண்மை தான். நான் தற்போது அவருடன் இல்லை. சக நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உண்மை தான்... இதுகுறித்து தான் எதுவும் பேசவில்லை... விஷயம் வெளியில் வரும் போது வரட்டும் என்று அவரது மனைவி கூறியுள்ளாராம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.