உன்னாலே எந்நாளும்.!!

அன்பின் இருப்பிடம் நீயான போது
அகிலம் எல்லாம் நீயடி பெண்ணே
ஆவல் கொள்ளும் அற்புத மனசு
ஆசை தவிர்த்தது உன்னாலே பெண்ணே.


இன்பம் தந்திடும் இல்லாள் ஆகி
இசையின் ஒலியும் நீதானே பெண்ணே
ஈகம் தேடும் ஆணின் மனசை
ஈர்க்க வைத்தவள் நீயடி பெண்ணே

உறவின் உன்னதம் இயல்பாய் இருக்க
உணர்வின் விழிப்பும் நீயென உணர்ந்து
ஊர்வலம் போகும் மேகம் போலே
ஊர்ப்பட்ட ஞாபகம் உணர்ந்தேன் மேல

எல்லா விடையும் நானான போது
எனது கேள்வி நீதான் பெண்ணே
ஏற்றம் பெற்ற காதல் வாழ்வை
ஏழிசை கொண்டு மீட்டுவாய் கண்ணே,,,,,

Moorththy Dinu

No comments

Powered by Blogger.