தரமான இலக்கை நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!!
இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணிக்கு 316 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தீர்மானம்மிக்க மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒடிசா மாநிலத்தின் ஹட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் துடுப்பெடுத்தாடிய நடு வரிசை வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து வேகமாக ஓட்டத்தை குவித்தனர்.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்களைப் பெற்றது.
அணிசார்பாக, நிக்கோலஸ் பூரான் 3 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் கீரன் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 7 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
மேலும், ஷை ஹோப் 42 ஓட்டங்களையும், ரொஸ்ரன் ஷாஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, ஷிம்ரொன் ஹெற்மியர் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக, நவ்தீப் ஷைனி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகுர், மொஹம்மட் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 316 என்ற வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை