தொப்புள்கொடி - கவிதை!!
அதோ அந்த
அய்யனார்
கோவில்தான்
எங்கள்
குலத்தெய்வம்
கண்ணனும்
சூசையும் என்
சகோதரர்கள்
அம்மை போட்டால்
மாரியத்தா
கோவிலே எங்கள்
வைத்தியச்சாலை
கருப்பாயி
பாட்டித்தான்
வேப்பிலையடித்து
துன்னூர்
பூசிவிடும்
சமத்துவம்
நிறைந்த அந்த
ஆலமரத்து
பள்ளி
அந்த ஆலமரமே
என் போதிமரம்
இஸ்லாமியர்
வீட்டு குழந்தைக்கு
காமாட்சியக்கா
இராமாயணமும்
மகாபாரதம்
சொல்லிதந்த
கதை
கண்ணன்
எங்கேயோ
பிறந்து யாதவர்
குலத்தில் வளர்ந்ததுப்
போல்
நானும் அப்படியே
பெயர்தான்
முஸ்லிம் பெயர்
வளர்த்ததெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகள்
பசியென்றால்
அமுதா அக்கா
கூழாவது
கொடுக்கும்
தகப்பனார்
இறந்தப்பிறகு
பிழைப்பதற்கு
வந்தோம்
கிராமத்திற்கு
பிறந்த
கிராமத்திற்கும்
வளர்ந்த
கிராமத்திற்கும்
மூன்று மையில்தான்
வித்தியாசம்
கிராமத்து
தர்மர்கள்
எங்களுக்கு
அன்போடு
அடைக்கலம்
தந்தார்கள்
வீடு கட்ட
பெருமாள்
அண்ணன்
இடம் தந்தார்
ஜான்ஸ் அக்கா
ஓலை கம்பு மரம்
தந்தார்
கிராமம் வாழ்வு
தந்தது
அந்த தொப்புள்
கொடிகளுக்கு
தீங்கு நினைப்பதே
பாவம்
கிராமத்தில்
தீட்டு. தீண்டாமை
இருக்கு ஆனால்
பசியென்றால்
புசியென்று
சொல்ல
தர்மர்களும்
இருக்கின்றார்கள்
கிறிஸ்த்துவன்
முஸ்லிம்
பௌத்தனென்று
வேசம்
போட்டுக்கொண்டோம்
வாழ்வதெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகளோடு
......................
கவிஞர்
பட்டுக்கோட்டை காதர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அய்யனார்
கோவில்தான்
எங்கள்
குலத்தெய்வம்
கண்ணனும்
சூசையும் என்
சகோதரர்கள்
அம்மை போட்டால்
மாரியத்தா
கோவிலே எங்கள்
வைத்தியச்சாலை
கருப்பாயி
பாட்டித்தான்
வேப்பிலையடித்து
துன்னூர்
பூசிவிடும்
சமத்துவம்
நிறைந்த அந்த
ஆலமரத்து
பள்ளி
அந்த ஆலமரமே
என் போதிமரம்
இஸ்லாமியர்
வீட்டு குழந்தைக்கு
காமாட்சியக்கா
இராமாயணமும்
மகாபாரதம்
சொல்லிதந்த
கதை
கண்ணன்
எங்கேயோ
பிறந்து யாதவர்
குலத்தில் வளர்ந்ததுப்
போல்
நானும் அப்படியே
பெயர்தான்
முஸ்லிம் பெயர்
வளர்த்ததெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகள்
பசியென்றால்
அமுதா அக்கா
கூழாவது
கொடுக்கும்
தகப்பனார்
இறந்தப்பிறகு
பிழைப்பதற்கு
வந்தோம்
கிராமத்திற்கு
பிறந்த
கிராமத்திற்கும்
வளர்ந்த
கிராமத்திற்கும்
மூன்று மையில்தான்
வித்தியாசம்
கிராமத்து
தர்மர்கள்
எங்களுக்கு
அன்போடு
அடைக்கலம்
தந்தார்கள்
வீடு கட்ட
பெருமாள்
அண்ணன்
இடம் தந்தார்
ஜான்ஸ் அக்கா
ஓலை கம்பு மரம்
தந்தார்
கிராமம் வாழ்வு
தந்தது
அந்த தொப்புள்
கொடிகளுக்கு
தீங்கு நினைப்பதே
பாவம்
கிராமத்தில்
தீட்டு. தீண்டாமை
இருக்கு ஆனால்
பசியென்றால்
புசியென்று
சொல்ல
தர்மர்களும்
இருக்கின்றார்கள்
கிறிஸ்த்துவன்
முஸ்லிம்
பௌத்தனென்று
வேசம்
போட்டுக்கொண்டோம்
வாழ்வதெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகளோடு
......................
கவிஞர்
பட்டுக்கோட்டை காதர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை