அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் நோக்கமே கருணாவிடம் உள்ளது – கோடீஸ்வரன்!
அம்பாறையில் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் நோக்கமே கருணாவிடம் உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக் கண்ணீர் வடிக்கத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மல்வத்தை விபுலானந்ததா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “தமிழர்களின் வாக்குகளை பிரிக்கவும் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவுமே கருணா அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். நான் அவருக்கு அமைச்சர் பதவியை எடுத்துக் கொடுக்கிறேன் என்று இங்கு வந்து கூறுகிறார். அவருடைய மாவட்டத்தில் இருக்கின்ற வியாழேந்திரனுக்கு முதலில் அமைச்சர் பதவியை எடுத்துக் கொடுக்கட்டும்.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவியிலிருந்து கருணா ஒருபோதும் அம்பாறை மாவட்டத்திற்கு வந்தது இல்லை. அம்பாறை மாவட்டத்தில் எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் செய்ததும் இல்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு பெற்று கொடுத்ததும் இல்லை. இப்போது நீலிக்கண்ணீர் வடித்து உள்நுழைகின்ற வேலைப்பாட்டை செய்து வருகின்றார்.
முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து புனர்வாழ்வு பெற்றுக்கொடுத்து உதவி அளிக்கப் போவதாக கூறியிருந்தார். ஆனால் தான் அமைச்சுப் பதவியில் இருக்கும் போது முன்னாள் போராளிகள் தவிக்கவிட்டவர் கருணா. எங்களது பிள்ளைகளை கடத்தி வற்புறுத்தல் செய்தவர்.
போராட்டங்கள் நடத்துவதற்காக சிறு பிள்ளைகளை கடத்திச் சென்றவர். இன்று அம்பாறை மாவட்டத்தில் எமது இளைஞர்களை யுவதிகளை மாற்றப்போகுகின்றாரா?
அம்பாறை மக்கள் தமிழிலும் தமிழ் தேசியத்திலும் பற்றுறுதி கொண்டவர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் ஒன்றாக வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள்” என்று தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை