இலங்கையில் சூரிய கிரகணத்தினால் வரப்போகும் தீங்குகள்!!

எதிர் வருகின்ற சூரிய கிரகண நாளில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையில், எதிர்வரும் 26.12.2019 வியாழக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெற இருக்கின்றது.

இலங்கை நேரப்படி காலை 08.09 மணிமுதல் பகல் 11.22 மணிவரையுள்ள காலப் பகுதிகளில் இது இடம்பெறும்.

இலங்கையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும். அன்றைய தினம் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினம் என்பதால் காலை பூசைகள் 8 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

பின்னர் காலை 8.05 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்குப் பின்னர் பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.

எனவே இதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆலயங்களில் எவ்விதமான வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது. இந்தக் கிரகண காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் சூரியனில் இருந்து வரும் செவ்வூதாக் கதிர்களால் நஞ்சாகும் தன்மை உடையன.

அதனால் அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். அவ்வாறு உணவுகள் இருந்தால் அவற்றைத் தர்ப்பை புல்லினால் மூடி வையுகள். அதன் பின்னர் அவற்றைப் பாவிக்கலாம்.

வெற்றுக் கண்ணினால் சூரியனை இக்காலப் பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்க்கவும். ஈரத்துணி கொண்டு பார்க்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் இக்காலப் பகுதிகளில் வெளியில் செல்வதையோ அல்லது சூரிய கிரகணத்தினைப் பார்ப்பதனையோ தவிர்க்கவும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.