ஜனாதிபதியும் சுனாமியினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்!!
15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று (26) நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தமது நெருங்கிய உறவுகளை இழந்து இன்றும் துயரத்தில் ஆழ்ந்துள்ள அனைத்து இலங்கையர்களுடனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இணைந்துகொண்டுள்ளார்.
“இலங்கை மக்கள் இதுவரை முகங்கொடுக்க நேர்ந்த மிகக் கொடூரமான இயற்கை அனர்த்தம் சுனாமி பேரலையாகும். அந்த பயங்கர அனுபவத்தின் துயர் மிகுந்த ஞாபகங்கள் ஒருபோதும் எமது மனங்களை விட்டு அகலாது.” அதனை ஒரு கடந்தகால அனுபவமாகக் கருதி எதிர்காலத்தில் அத்தகைய அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதற்காக புதிய தொழிநுட்ப முறைகளுடன் இணைந்துகொள்ள வேண்டுமென்பதோடு, தொடர்ச்சியாக அவற்றை மீளாய்வுக்குட்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சுனாமி பேரலையினால் எமது நாடு இழக்க நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசிவேண்டி அவர்களை நினைவுகூர வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அழிவு மீண்டும் ஒருபோதும் இடம்பெறக்கூடாதெனவும் பிரார்த்தித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை