தமிழ் சினிமா 2019: ஆகஸ்ட்-செப்டம்பர் மாத வசூல் ராஜா யார்?

ஆகஸ்ட் மாதம் 20 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இதில் வெகுஜன தளத்தில் கவனம் ஈர்த்தவை ஐந்து படங்கள் மட்டுமே. அதிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஹிட் அடித்த கோமாளிக்கு முதலிடமும், நேர்கொண்ட பார்வை படத்திற்கு இரண்டாம் இடமும் எனக் கூறலாம்.

ஜோதிகா நடித்த ஜாக்பாட் வெற்றிக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முடங்கிப் போனது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோனது. தொடர்ந்து தோல்விப் படங்களை மட்டுமே சந்தித்து வந்த சசிகுமார் கபடி விளையாட்டை மையமாக வைத்து பாரதிராஜாவுடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடித்த கென்னடி கிளப் படம் வசூல் அடிப்படையில் கண்ணாடி போன்று நொறுங்கிப் போனது.



கழுகு முதல் பாகம் வெளியான போது குறைந்தபட்ச வெற்றி பெற்றது. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு கழுகு-2 தயாரிக்கப்பட்டு வெளியான போது வந்த வேகத்தில் திரும்பி சென்றது. தொரட்டி திரைப்படம், நாடோடிகளாக வாழ்க்கை நடத்தி ஆடு மேய்க்கும் கீதாரிகள் பற்றிய வாழ்வியல் சார்ந்த திரைப்படமாக இருந்தது. இந்தப்படம்

படைப்பு ரீதியாகப் பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாகத் தோல்வியைத் தழுவியது. பிற படங்கள் அனைத்தும் வந்த சுவடே தெரியாமல் தங்கள் கணக்கை முடித்துக்கொண்ட திரைப்படங்களாக அமைந்து போனது.

ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. ஜாக்பாட்

2. கழுகு-2

3. தொரட்டி

4. ஐ.ஆர். 8

5. நேர்கொண்ட பார்வை

6. கொலையுதிர் காலம்

7. ரீல்

8. சீமபுரம்

9. வளையல்

10. கோமாளி

11. மான்குட்டி

12. புலி அடிச்சான் பட்டி

13. கென்னடி கிளப்

14. பக்ரித்

15. மெய்

16. காதல் பிரதேசம்

17. குற்ற நிலை

18. மயூரன்

19. சஹோ

20. சிக்ஸர்

செப்டம்பர் மாதம் 14 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இவற்றில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி சுமாரான வசூலுடன் இருவாரங்களை தியேட்டர்களில் கடத்தியது.

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் தமிழகத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை இந்த ஆண்டு வெளியான படங்களில் அனைத்து தரப்புக்கும் லாபத்தைப் பெற்றுத்தந்த படமாகும்.



சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் விமர்சகர்கள் பாராட்டை பெற்றதுடன் சுமாரான வசூலையும் ஈட்டிய படமாக இருந்தது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் - 7’மிகப் பெரும் பாராட்டை பெற்றாலும் இந்த படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்கீடு செய்ய, மாநில அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் வெகுஜன தளத்தில் வெற்றி பெறவில்லை. பிற படங்கள் அனைத்தும் வந்து சென்ற சராசரி படங்களாக மட்டும் இருந்தது.



செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. மகாமுனி

2. சிவப்பு மஞ்சள் பச்சை

3. ஜாம்பி

4. என் காதலி சீன் போடுறா

5. உங்கள போடணும் சார்

6. பெருநாளி

7. காப்பான்

8. ஒத்த செருப்பு சைஸ் 7

9. சூப்பர் டூப்பர்

10. என்றும் உன் நினைவிலே

11. கோலா

12. நமக்கு நாம்

13. நம்ம வீட்டு பிள்ளை

14. திட்டம் போட்டு திருடுற கூட்டம்

நாளை: அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.