ஜனவரி மாதம் வருது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்ஸ்!

2020ஆம் ஆண்டு நிறைய புது மாடெல் ஸ்மார்ட்போன்ஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.


சாம்சங் 2019ஆம் ஆண்டு வெளியிட்ட Galaxy S10, Galaxy Note 10 வரிசையில் Galaxy S10 LITE, Galaxy Note10 LITE என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இவற்றின் விலை 35,000 முதல் 50,000 வரை இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் EXYOS 9810 என்ற தனித்துவம் வாய்ந்த ப்ராசசரை கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் ஒன் பிளஸ் நிறுவனம் 'ஒன் பிளஸ்: கான்செப்ட் ஒன்' என்ற நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை காட்சிக்கு அறிமுகப்படுத்தப்போகிறார்கள் என்ற அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஃபோல்டபல் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பெரும் எதிர்பார்ப்பு நிகழுகிறது. 2019ஆம் ஆண்டு மோட்டோ நிறுவனம் 1 லட்சத்திற்கு ஃபோல்டபல் ஸ்மார்ட்போன் வெளியிடப்போவதாக அறிவித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு முடியப்போவதால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் மீ தரப்பில் 'C' சீரிஸ் வரிசையில் C3 என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi வெளியிட்ட 108 மெகா பிக்ஸல் கொண்ட ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.