இலங்கை அணியின் முன்னாள் வீரர் பொதுத் தேர்தலில்!

இலங்கை அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான திலகரத்ன டில்ஷான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


இன்று (திங்கட்கிழமை) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், “அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு வேலைத் திட்டம் அவசியம். கிரிக்கெட்டின் இழந்த மகிமையை மீண்டும் பெறுவதற்கு முயற்சிப்பேன்” என கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிட அவர்களின் ஒப்புதலைப் பெற்றதாகவும் திலகரத்ன டில்ஷான் கூறியுள்ளார்.

மேலும் தனது அடுத்தகட்ட நகர்வு நமது நாட்டின் விளையாட்டுத்துறையை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நபவம்பர் மாதத்தில் திலகரத்ன டில்ஷான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.