தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குவாரா?

தான் பதவிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்வதாக கோத்தபாயா ராஜபக்சா கூறியிருந்தார்.ஆனால் அவர் கூறியபடி இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

அதேவேளை தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பறவைகளை அவர் விடுதலை செய்திருக்கிறார்.

தமிழ் மக்களின் வோட்டில் அவர் ஜனாதிபதியாகவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அவருக்கு உண்டு.

அவர் அதனை தாமதம் இன்றி உடன் நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பு - அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 7 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையாயின் பாராட்டப்பட வேண்டியதே.
Powered by Blogger.