அவுஸ்திரேலியாவில் ஏன் இந்த அவலம்!!

சிட்னி நகரமும் எங்கள் வீட்டை சுற்றியும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. சூரியன் ஒரே சிவப்பாக காட்சி அளிக்கின்றது. சுற்றுப்புறங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. உலகத்தில் முதலாவது மாசடைந்த வளிமண்டலம் உள்ள நகரம் இப்பொழுது சிட்னிமாநகரமாக இருக்கின்றது.
இவை எல்லாம் இயற்கையின் தண்டனையோ அல்லது இப்படித்தான் இயற்கையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதற்குள் சிலர் சிலரை குற்றம்சாட்டி கொண்டு இருக்கின்றார்கள். அதாவது சில காலங்களுக்கு முன்பு ஓரினச் சேர்க்கையை அரசு சட்டபூர்வ ஆக்கினார்கள். அதேபோல கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கினார்கள். இதனால்தான் யேசுவின் கோபத்தால் இந்த தண்டனையை கொடுத்திருப்பதாக ஒரு சமயப் பிரபலம் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல முன்னைய பிரதமர் ஒருவர் உலக மாசடைதல் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் இதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இப்படி ஒரு காட்டு தீயையும் சிட்னியில் புகை மண்டலத்தையும் தனது வாழ்நாளில் காணவில்லை என்றும் முன்னைய பிரதமர் சொன்னார். அவுஸ்திரேலிய விவசாயிகள் மிகவும் கஸ்டத்தில் உள்ளார்கள்.

இவை எல்லாம் எதிர்கால உலகம் மிகவும் ஆபத்தான ஒன்றாக இருக்கப் போகின்றது என்பதை சாதுவாக சுட்டிக்காட்டுகின்றது. ஆகையால் உலகம் மாசடைவதை உலக வல்லரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததி நிம்மதியாக வாழ்வார்களா என்ற கேள்வி எழுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.