அருவி ரோலிங்: நீண்ட நாள் காத்திருப்பின் பலன்!

எதிர்பாராத வெற்றிபெற்று ரசிகர்களை அட போட வைக்கும் சில படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது அருவி திரைப்படம். ‘அடுத்து என்ன’ என்ற கேள்வி, அருவி படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கிய அதிதி பாலனிடம் தொடர்ந்து கேட்கப்படும் அளவுக்கு இந்தப் படத்தின் மூலம் பெயர்பெற்றார். ஆனால், எந்தப் படத்திலும் உடனடியாக கமிட் ஆகாமல் காத்திருந்தவர் இப்போது கமிட் ஆகிவிட்டார்.
நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, லிஜு கிருஷ்ணா இயக்கும் ‘படவெட்டு’ திரைப்படத்தில், நிவினுக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி. இந்தப் படத்தை சன்னி வெய்ன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், 96 திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீக காலங்களாக நிவின் பாலி நடித்த எந்தத் திரைப்படமும் வெற்றிபெறவில்லை. புதுமுகங்களின் படங்கள் ரசிக்கப்பட்ட அளவுக்குக்கூட, நிவின் பாலியின் படங்கள் பேசப்படவில்லை என்பதால் தமிழ் சினிமாவுக்குத் தெரிந்த கலைஞர்களுடன் இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கலாம்.
Powered by Blogger.