தமிழ்த்தேசியத்திற்க்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே தவிர அது மாற்று அணியாக இருக்காது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.

நேற்றுவரைக்கும் கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன , எத்தனையொ முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றபோது கொள்கை ரீதியாக கதைக்காதவர்கள் தற்போது கதைப்பது தான் ஏன் மாற்று என்று சொல்வது எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பதவிகள் சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு அவர்களை வெளியேற்றப் போகிறார்கள் அல்லது பதவிக்காலம் முடிகின்ற தறுவாயில் வேறு வழியைத் தேடுவதற்காக எடுக்கும் முடிவுகள் மாற்று அணியாக இருக்கப்போவதில்லை.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியால் ஆறு கட்சிகளின் கூட்டு முயற்சி ஒன்று இடம்பெற்றது. இதன்போது 13 கோட்பாடுகள் தயாரிக்கப்பட்டது. இதில் நாங்கள் தான் கூடுதல் பங்களிப்பை வழங்கினோம் அந்தப் 13 முதல் ஒன்று இரண்டு மூன்றை எடுத்துக்கொண்டால் தமிழர் தேசியம் தங்களுக்கு என்று ஒரு இறைமை இருக்கின்றது.

ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றோம். சுயநிர்ணய அடிப்படையில் தான் சமஷ்டியை ஏற்றுக்கொள்வோம் எனப் பல விடையங்கள் கூறப்பட்டுள்ளது. கொள்கை ரீதியாக இத்தகைய கருத்துக்களை கூறிக்கொண்டு அதற்கு நேர்மையாக இருக்கப்போகிறீர்கள் என்றால் அதனை அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய இடம் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய அரசியல் அமைப்புச் சபை அந்த அரசியல் அமைப்புச் சபை கடந்த 4 அரை வருடமாக இயங்கி ஒரு இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது.

ஆறு கட்சிகள் இணைந்து தயாரித்த 13 கோரிக்கைகளை அடியோடு நிராகரித்து அதற்கு நேர்மாறாகத்தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொள்ளைகயில் இணங்குவது என்பது ஒன்று அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய இடத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பவேண்டும் என்பதுதான் முக்கியம்.

 அந்த இடத்தில் ஒரு பிழையான காரியம் இடம்பெற்றுள்ள நிலையில் அதனை நிராகரித்து இந்த 13 கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற புது முயற்சியைத்தான் செய்திருக்கவேண்டும். அதனை செய்யாது ஏனைய ஐந்து கட்சிகளும் அந்தக் கோட்பாட்டை நிராகரித்தார்கள்.

குறித்த பேச்சுவார்த்தையில் சுமந்திரன் கலந்துகொள்வதற்கு முன்னர் அரசியல் அமைப்பு சபையில் வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை செத்துவிட்டது. என்று இனி அது மீள் எடுக்கப்போவதில்லை எனக்கூறினார்கள். சுமந்திரன் கலந்துகொண்டபோது இடைக்கால அறிக்கை செத்துப்போகவில்லை அதனைத்தான் நாங்கள் முன்கொண்டு செல்லப்போகின்றோம். அதுதான் எங்கள் தேர்தலுக்கான அனுகுமுறையாக இருக்கப்போகின்றது.

அதன்போதும் நாங்கள் தெளிவாகக்கூறுகின்றோம் இதனை நிராகரிக்கவேண்டும் என்று தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் ரெலோ, ஈபி.ஆர்.எல்.எவ், விக்கினேஸ்வரன் முதலமைச்சராக இருந்தார். அவரும் அதை நிராகத்தார் ,

புளட் அது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு எனக்கூறியவர் அதனை நிராகரிக்கவில்லை. இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சி என்பதை நான்கு கட்சிகளும் கூறியதுடன் மக்களுக்கும் அதனைக் கூறியுள்ளார்கள் நாங்களும் அதனை கூறி நிராகரிக்க வேண்டும் என்று கூறுகின்றோம் அப்படியாயின் நான்கு கட்சிகளும் நாங்கள் செல்லும் கருத்துடன் இனங்கியிருக்கவேண்டுமே தவிர எவ்வாறு சுமந்திரனுடன் இணைய முடியும்.

சுமந்திரன் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு இதைத்தான் நடைமுறைப்படுத்தப்போறோம் என்று கூறிய பின்னரும் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்றால் மக்களுக்கு ஒரு கதை உள்ளே முக்கியமான இடங்களில் ஒரே நிகழ்ச்சி நிரலில் தான் இயங்குகின்றார்கள். ஆகவே மாற்றாக இருக்கக்கூடியது நாங்கள் மட்டும்தான் ஏனைய தரப்புக்கள் ஒன்றுசேர்ந்தாலும் நாங்கள் ஆச்சரியத்தக்க விடையமாக இருக்காது.

கொள்கை ரீதியாக எத்தகைய வேறுபாடும் இல்லை. அந்த மாற்று அணி நாங்களாக இருக்கக்கூடாது என்பதற்காக ஒருபோலி மாற்றை உருவாக்கி எங்களை வெற்றியடையாது மூன்றாம், நான்காம் தரப்பாக தள்ளப்படுவதற்கான முயற்சியாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.