மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி விருது வழங்கி கௌரவிப்பு!!📷
மனித உரிடையை பிரகடனப்படுத்திய நாளாக மார்கழி மாதம் 10 ஆம் திகதியை உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இவ் வருடத்தை 'மாற்றத்தின் ஆக்க பூர்வமான முகவர்கள்' எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அழைப்பதுடன் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயல் பட்ட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் நேற்று (14) சனக்கிழமை காலை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் உப்புக்குளம் விருந்தினர் மாளிகையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
நன்றி
பட உதவி.ஜீவன் ANO
கருத்துகள் இல்லை