பைத்தியம் பிடிக்காத குறையா வேலை செஞ்சாங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான மீனா கதாநாயகியாக நடித்து வெளியாகவிருக்கும் ‘கரோலின் காமாட்சி’ வெப் சீரீஸ் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ 5 செயலியில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரீஸின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதில் மீனாவின் நடிப்பும்,
அவரது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த டீசரின் இறுதியில் மீனா கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதான காட்சிகள் அமைந்திருக்கும். இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் நேற்று(டிசம்பர் 3) இந்த வெப் சீரீஸின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேசிய நடிகை மீனா, “கரோலின் காமாட்சி வெப் சீரீஸில், கரோலினாக நடித்தது வித்தியாசமான புதிய அனுபவமாக இருந்தது. இது போன்ற சிறந்த யோசனையைக் கொண்டு வந்த விவேக் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண டிவி சீரியல் போன்று இருக்காது. அமேசான், நெட்ஃபிளிக்ஸில் பார்ப்பது போன்ற உயர்தரத்தில் இந்த வெப் சீரீஸ் அமையும் என்று அவர் உறுதியளித்திருந்தார். அதை அவர் காப்பாற்றியுள்ளார். நான் எனது சிறப்பைக் கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன். இந்த புதிய முயற்சியில் எனது கதாபாத்திரத்திற்கான பல யோசனைகளைக் கொடுத்திருந்தேன். இதில் கரோலினாக நடித்திருக்கும் ஜோர்ஜியா, நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார், அது அவரது ஆர்வத்தை உணர்த்தியது” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவருடன் நடித்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் இந்த வெப் சீரீஸின் ட்ரெயிலரை பெருந்தன்மையாக ரிலீஸ் செய்த நடிகர் மம்மூட்டிக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதன் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் மிகவும் ஆர்வமாக பைத்தியம் பிடிக்காத குறையாக வேலை செய்தார்கள் என்றும் கூறினார்.
Powered by Blogger.