தானாய் சேரும் கூட்டம், சமூகதளம் ஒருங்கிணைக்கும் போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இன்று சென்னையில் சமூகதளங்கள் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட திடீர் போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கட்சியினர், அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க... இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்துவதற்காக சமூக தளங்களில் முன்னெடுப்புகள் தொடங்கின. வாட்ஸப், பேஸ்புக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம் 22.11.2019 மாலை நடைபெறும் என்று தகவலறிந்துகொண்ட போலீஸார் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்றபோதும் கடற்கரைக்குள் மக்களை அனுமதிக்க கடும் நிபந்தனைகள் விதித்தனர். பல பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட வருகிறார்களா, பொழுதுபோக்க வருகிறார்களா என்பதை அறிய முடியாததால் மக்களை கடற்கரைக்கு செல்லாமல் போலீஸார் திருப்பி அனுப்பினர்.


இந்நிலையில் கடற்கரைக்கு செல்லமுடியாதால் பெசன்ட் நகர் டெப்போ அருகே மக்கள் குவிந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பதாகைகளையும் முழக்கங்களையும் எழுப்பி போராடினர்.


கட்சி, அமைப்பு சார்பில் இல்லாமல் மக்கள் தாங்களாகவே சமூக தளங்கள் வழியாக ஒருங்கிணைத்த இந்த போராட்டம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.