பிளாக் விடோ: சொல்லப்படாத மனிதப் பெண்ணின் கதை!

மார்வெல் நிறுவனம் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்றால், அதன் காமிக் காலத்தில் எழுதப்பட்டது போல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களை ஒரு காட்சிப் பொருளாகவே மில்லினியல்
காலத்திலும் உருவகித்து வந்ததுதான். மார்வெல் விழித்துக்கொள்வதற்கு முன்பாக, அதன் போட்டியாளரான DC முழித்துக்கொண்டு ‘வொண்டர் வுமன்’ திரைப்படத்தை எடுத்துவிட்டது. இது மார்வெல் நிறுவனத்துக்கு அழியாப் பழியைக் கொடுக்க, ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படத்தின் மூலமும், இப்போது பிளாக் விடோ திரைப்படத்தின் மூலமும் பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருக்கிறது.
மார்வெல் தாமதித்தது என்றாலும், அதன் உள்கட்டுமானம் மிகச் சிறந்ததாக இருந்ததால் தப்பித்துக்கொண்டது. கடவுளாகவே பிறந்தவன், தொழில்நுட்பத்தால் கடவுளானவன் என ஆண் சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய மார்வெல், பெண் சூப்பர் ஹீரோக்களை மட்டும் தனித்துவமாகக் கையாண்டது. 


அவர்கள் மனிதர்களாகவே பலமாக இருப்பதால் அவர்கள் சூப்பர் வுமன்கள் என்று உருவகப்படுத்தியது. அந்த வரிசையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வந்திருப்பது, மார்வெல் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிளாக் விடோ.
பிளாக் விடோ டிரெய்லரை மார்வெல் வெளியிட்டதிலிருந்தே உலகளவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. மார்வெல் யூனிவர்ஸின் சூப்பர் ஹீரோ படங்களில், குறைவான என்று கூட சொல்லமுடியாத அளவுக்குப் பின்புல கதையே இதுவரை சொல்லப்படாதவர் பிளாக் விடோ. அவரது கதையில் குடும்பம், தங்கை எனக் கொண்டுவந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதிலும், அவர்கள் அதிகம் பார்த்து ரசித்த ரேச்சல் வெய்ஸ் மற்றும் ஃப்ளாரன்ஸ் புக் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் நடிப்பதால் ஏகபோகத்துக்கும் எகிறியிருக்கிறது இதன் எதிர்பார்ப்பு. ஹல்க் மற்றும் அயர்ன் மேன் ஆகிய கதாபாத்திரங்கள் இந்தத் திரைப்படத்தில் வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.