இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது!
வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டு, துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது.
கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை