T.I.D விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டவரை காணவில்லை!!

T.I.D விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் தொண்டமனாற்றை சேர்ந்த விஜயராஐ் என்பவர் கடந்த 6ம் திகதி முதல் காணாமற் போயுள்ளார்.

இவர் விசாரணைக்காக கொழும்பு சென்ற நிலையில் இது வரை வீடு திரும்பவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

காணாமற் போனவர் மிகவும் வறிய நிலையில் உள்ளவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-மதி சூட்டி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.