களத்தில் நின்றவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்??📷

மாவீரர்கள்
ஈழத்தமிழர் மட்டுமல் உலகத் தமிழர் நிமிர்வுக்கு அவர்கள் தான் வீரியம் தந்தவர்கள். மிதித்தேறிப்போகலாம் என்றிருந்த இனத்திற்கு முகமும் முகவரியும் தந்தனர் பிள்ளபை;
பூச்சிகளாக எடுப்பாவைப் பிள்ளைகளாக அழைத்தவர் பின்னே ஓடிய இனத்திற்கு நிர்வும் திர்வும் தந்தனர். விடுதலை அவர்களின் மூச்சாயிருந்தது. போராட்டம் அவர்களின் மூச்சாயிருந்தது. தாயகம் அவர்களது கனவாயிருந்தது. வெறும் பேச்சிற் கழியவில்லை அவர் பொழுது. களத்தில் நின்றனர். களத்தில் உண்டனர். களத்தில் உறங்கினர். களத்தில் உயிர்விட்டனர். அவர்களுக்கு எந்த மயக்கமும் இருக்கவில்லை. இவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்

ஒரு நாள் கூடி பூ வைத்து நெய் விளக்கேற்றி அந்தப் பாடலையும் பாடி போதல் மட்டும் போதுமா? சின்னப் பருவத்தின் கனவைத் துறந்து இளமைக்காலத்தின் சிறகை வெட்டி தங்கள் சுவாசித்த கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு என்ன கைமாறு செய்தோம் நாம்.
துயிலும் இல்ல வாசல் கடக்கும் ஒவ்வொரு தடவையும் தண்டனையற்ற குற்றவாளிகள் போலத்தான் நடந்து போகின்றோம் உங்களை நம்பியே உள்ளே கிடக்கின்றோம் எங்கள் நெருப்பில் குளிர் காயாதீர் என்று காற்றில் வருகின்றது கல்லறைக்குரல். துயிலும் இல்லம் நுழையும் போதில் நீதிமன்றத்தில் நிற்பது போலத் துடிக்கின்றது மனம் விட்டபணி தொடராத குற்ற உணர்வில் வேர் காய்ந்து விடுகின்றது உள்ளே. அந்த வகையில்
ஒரு நாளில் மட்டும் எமது மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பதோடு நின்று விடக் கூடாது அவர்களின் வாழ்வியலை மேம்படுத்த வேண்டும் என்று யாழ்.ஏய்ட் கருதியது. அதன் பிரகாரம்
27.11.2017 இல் யாழ்.ஏய்ட் ஒரு பதிவினை இட்டிருந்தது.......
'எமது இனவிடுதலைக்காக ஒன்று அல்லது இரண்டு மூன்று பிள்ளைகளை மாவீரர்களாக இந்த மண்ணிலே விதைத்துவிட்டு வாழுகின்ற எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு தலைவணங்குவதுடன் அக்குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்காக கஸ்ரப்படுகின்ற மாவீரர் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவீரர்குடும்ப நலன் மேம்பாட்டு செயற்றிட்டத்தினை அப் புனிதர்களின் நாளில் ஆரம்பிக்கின்றது.
வாழ்வாதாரத்திற்காக இடர்படுகின்ற அவர்களின் பெற்றோருக்கு ஒரு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் எமது நண்பர்கள், பொதுநலன்படைத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரினது துணையுடன் இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என்று
அன்று பதிவிட்டபடி
27.11.2017 தொடக்கம் 25.11.2018 வரையான ஒரு வருடக்காலப்பகுதியில் யாழ்.ஏய்ட் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 63 மாவீரர் போராளி குடும்பங்கள் உட்பட 125 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாடுக்கான உதவிகளை வழங்கியது.
அதேபோல் இவ்வருடம்  25.11.2018 - 27.11.2019 வரையான  ஒரு வருடக்காலப்பகுதியில் யாழ்.ஏய்ட் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 123 மாவீரர் போராளி குடும்பங்கள் உட்பட 179 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாடுக்கான உதவிகளை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டிலும் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடரும் அதே மிடுக்குடன்
- யாழ்.ஏய்ட்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.