நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை!


எதிர்வரும் 26ம் திகதி காலை 8.36 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படவுள்ளது.

காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு நிமிடம் வரை நெருப்பு வளையம் போல தென்படும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சூரியனின் நடுவில் பெரிய பொட்டு வைத்தது போல நிலவு கருமை பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போலக் காட்சி தரும் எனவும் இதுவே வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.