வன்னியில் விழிப்புலனற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றும் நிகழ்வு!!
வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கும் பல சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது லிபாரா அமைப்பு.
இந்நிலையில் வன்னியில் விழிப்புலனற்றோரின் குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் கல்விக்கு உதவி வழங்கி அவர்களின் கல்விதரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணியில் லிபாரா அமைப்பு முன்னின்று செயற்பட்டுவருகிறது.
வன்னியில் வாழும் யுத்தத்தினால் விழிப்புலனையிழந்த குடும்பங்களிலுள்ள 191 பிள்ளைகளுக்கு கடந்த இரண்டு வருங்களாக வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பங்களிப்புடன் பல்வேறு உதவிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்த திட்டத்தினூடாக கடந்த காலங்களில் மிகவும் திறமையான சித்திகளை பல மாணவர்கள் பெற்றுள்ளனர். முக்கியமாக க. பொ.த. மற்றும் புலமைப்பரிசில் பரீட்சசைகளில் சித்தியடைந்துள்ளதுடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு 160 இற்கும் மேற்பட்ட குடும்பங்களிலுள்ள 191 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியிலுள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தற்காலிக அலுவலகத்தில் நடைபெற்றதோடு , இவ்வாறான விழிப்புலனற்ற 113 குடும்பங்களின் நாளாந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு லிபாரா அமைப்பு மாதாந்த உதவித் தொகையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை