பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்!

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் புதிய விதிகள் சில நடைமுறைக்கு வரவுள்ளது.


நாளை(வியாழக்கிழமை) முதல் பிரித்தானியாவில் ரயில் கட்டணங்கள் 2.7 சதவிகிதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

தொலை தூரத்தில் பணியாற்றும் மக்களுக்கு இந்த ரயில் கட்டண உயர்வானது 100 பவுண்டுகள் வரை இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

வடக்கு அயர்லாந்தில் இதுவரை தடை செய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படவுள்ளது.

மார்ச் 2ஆம் திகதி முதல் குறைந்தபட்ச மதுபானத்தின் விலையை நிர்ணயிக்கும் புதிய சட்டத்தை வெல்ஷ் அரசு அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி முதல் வடக்கு அயர்லாந்தில் பெண்கள் சட்ட அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனைகளை காலியாக விட்டால், கவுன்சில் வரி 50 சதவீதம் அதிகரிக்கும் என்ற நிலையில், ஏப்ரல் முதல், அந்த தொகை 100 சதவீதம் ஆக அதிகரிக்கிறது.

மேலும் ஏப்ரல் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.