மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சாதனை!

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து, பல்கலைக் கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டு, மாவட்ட தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் அண்மையில் வெளியிட்டது. குறித்த பெறுபேற்றின் பிரகாரம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து, வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வைத்தியத்துறைக்கு 13பேரும், பொறியியல்துறைக்கு 9பேரும், பொறியியல் தொழினுட்பம் 15பேரும், உயிரியல் முறைமைத் தொழினுட்பம் 11பேரும், கலைத்துறைக்கு 69பேரும், வர்த்தகத்துறைக்கு 52பேரும் அடங்கலாக மொத்தமாக 169பேர் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் (31) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இம்முறை அதிகூடுதலான மாணவர்களை சித்தியடையச் செய்து வரலாற்றுச் சாதனையினை நிகழ்த்தியுள்ளது. இவ்வாறான சாதனையை நிகழ்த்தி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

இவ்வாறான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவதற்கு உழைத்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஆசிரியர்களின் அயராத உழைப்பு, சிறந்த வழிகாட்டல்கல்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பு என்பவற்றுக்குக் கிடைத்த பரிசாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் கல்வி அடைவுகளை அதிகரிப்பதற்கு, அக்கல்வி வலயம் பல்வேறு விசேட செயற்திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவதனை நன்கறிவேன்.

எமது பிரசேத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகளின் சிந்தனையிலும், அரசியல் தலைவர்களின் முயற்சியினாலும் உருவான இத்தனியான கல்வி வலயம் அதன் உருவாக்கத்திலிருந்து தேசிய ரீதியில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியது. அவ்வாறு தேசிய ரீதியில் தடம்பதித்த குறித்த வலயமானது கடந்த சில வருடங்களாக கல்வித்துறையில் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது.

இவ்வாறு கல்வித்துறையில் பின்தள்ளப்பட்டு காணப்பட்ட இவ்வலயமாது. இப்போது பெரும் வளர்ச்சி கன்டு வருகிறது. அதற்கு கடந்தகால பரீட்சைப் பெறுபேறுகளும் சான்றாக உள்ளது. கல்வித்துறையில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் கானப்பட்ட குறித்த வலயத்தினை பணிப்பாளர் உமர் மௌலானா பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து அவ்வலயம் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

குறிப்பாக தற்போது குறித்த வலயத்தினுடைய கல்வி அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பாடசாலைச் சமூகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.