முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!!

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் 16ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


நேற்றையதினம் கள்ளப்பாடு தெற்கில் இருவரை ஐஸ் போதைப்பொருளுடன் முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.