ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், விபத்திற்குள்ளான போயிங் விமானத்தில் பயணித்த 180 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டமையானது ஈரானில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து , அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தி இருந்தது.

இரவு நேரத்தில் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதேவேளை இந்த , ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

எனினும் ஈரான் தரப்பில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும் , அமெரிக்க தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.