மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது!

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் மசகு எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக 4 வீதத்தால் அதிகரித்துள்ளது.


அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி ஒரு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மசகு எண்ணெய் உற்பத்தி தடையின்றி முன்னெடுக்கப்பட்டாலும் ஏதேனும் வகையில் சிக்கல் ஏற்பட்டால் மசகு எண்ணெய் சந்தையை நிலையாகப் பேணும் பொறுப்பை OPEC அமைப்பினால் ஏற்க முடியாது என அதன் பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இதன்காரணமாகவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.