அவுஸ்ரேலிய காட்டுத்தீ - பல லட்சம் நிலப்பரப்பு நாசம்!!

அவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்துவரும் ஆபத்தான காட்டுத்தீயினால், சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பக் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதால் காட்டுத் தீ மேலும் வேகமாகப் பரவக் கூடும்; எனவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இடைவிடாது பற்றி எரியும் இந்த காட்டுத்தீயினை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 5 மாதங்களாக கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கோடிக்கணக்கான வன உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.