இத்தனையை ஏன் கொடுத்தாய் .....- கவிதை!!
முல்லைப் பூ கொடுத்தாய்,
என்னவளே நீதான்
நின்னுலகம் என்றுரைத்தாய்.
வண்ணக்கனவுகளில்
எண்ணற்ற நிறம் கொடுத்தாய்.
செல்லச் சண்டைகளில்
சிலிர்த்து விழ வைத்தாய்.
பொன் மானென்றாய்,
புதுப்பூ என்றாய்,
உன் உலகம் மொத்தமும்
என் கனவு தானென்றாய்,
என் சிரிப்பில் நீ சிரித்தாய்,
என் அசைவை நீ ரசித்தாய்
நான் அழுதால் நீ துடித்தாய்,
உனக்குள்ளே எனை அடைத்தாய்.
அன்பென்ற சொல்லாலே
அரசாட்சி நீ புரிந்தாய்.
உன் அரியணையின் ராணியாக
எனை அமர்த்தி அழகு செய்தாய்.
காலச்சக்கரம் கடந்து நகர்கையில்
சித்தம் கலங்கவைத்தாய்,
நடைபிணமாய் நடக்கவைத்தாய்.
மை கொடுத்த கண்ணுக்கு
கண்ணீரை ஏன் கொடுத்தாய்?
கோபிகை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை