ரஞ்சனிடமிருந்து கடவுள் என்னை காப்பாற்றி விட்டார்- மஹிந்த!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் ஒலிப்பதிவில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க தொலை­பேசி ஒலிப்­ப­திவு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் அவ­ருக்கு பிறந்­தநாள் வாழ்த்­து­க்களை சொல்­லவே தான் அழைப்­பு­களை எடுத்­தி­ருந்தேன் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சிலவேளை தானும் தவறுதலாக ஏதேனும் பேசியிருந்தால் அதனையும் குரல் பதிவு செய்து வெளியே விட்டு இருப்பார்கள். கடவுள் புண்ணியத்தில் இவ்விடயத்திலிருந்து தப்பினேன் என அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.