சஜித் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் கிடைக்கப்படுவதில் உள்ள இழுபறி நிலையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உருவாகும் சாத்தியம் எழுந்துள்ளது.


இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஐ தே க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையை விட்டுக்கொடுப்பதில் தயக்கம் காட்டிவரும் நிலையில் மேலும் காலதாமதம் செய்யாமல் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க சஜித் ஆதரவு எம்பிக்கள் தீர்மானித்துள்ளதாக அறியமுடிந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.