இலங்கை வந்தனர் சீன மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள்!!

சீனா மற்றும் ரஷ்யா  நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.


அதற்கமைய அவர்கள் இன்று (திங்கட்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ரஷ்ய பிரிதிநிதி ஒருவர் இலங்கைக்கு வருவது இது முதற்சந்தர்ப்பமாகும்.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கை வரவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ்க்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

அத்துடன், இருதரப்பினரதும் கூட்டு செய்தியாளர் மாநாடு அன்றைய தினம் பகல் 12 மணியிலிருந்து 12.40 வரை வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.

இதனடிப்படையில் இன்று மற்றும் நாளை அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையிலுள்ள அரச சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.