டயானாவுக்கு பொதுவெளியில் இருந்த பிரச்சினைகள் மேகனுக்கும் ஏற்பட்டன -டயானாவின் பாதுகாப்பு அதிகாரி!!

இளவரசி டயானாவுக்கு பொதுவாழ்க்கையில் இருந்த அதே பிரச்சினைகள் மேகனுக்கும் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச குடும்பத்திலிருந்து விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக இளவரசி டயானாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கென் வோர்ஃப் (Ken Wharfe) தெரித்துள்ளார்.


இளவரசி டயானா மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கான மெற்ரோபொலிற்றன் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய கென் வோர்ஃப், எல்.பி.சி வானொலியின் நிக் ஃபெராரியிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்தின் மிகவும் பிரபலமான உறுப்பினர்களில் ஒருவரான ஹரியை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். வின்ட்சர் மாளிகையில் நடந்த ஹரியின் திருமணத்தைப் பார்த்தோம். அது முடியாட்சியின் எதிர்காலம் என்று எல்லோரும் கூறினார்கள்.

இது புதிய நவீன முடியாட்சி, இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை, திடீரென்று அது வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிகிறது.

டயானாவிற்கும் மேகனுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் ஒரே வெளிப்படையான ஒற்றுமைகள் என்னவென்றால், அவர்கள் இருவரும் பெண்கள் மற்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள். பொதுவெளியில் டயானாவிற்கு இருந்த அதே பிரச்சினைகள் மேகனுக்கும் ஏற்பட்டுள்ளன.

1997 ஆம் ஆண்டு பரிஸில் டயானா தனது வாழ்க்கையை சோகமாக இழக்கும் வரை அப்பிரச்சினைகள் அவரைத் தொடர்ந்தன என்று பாதுகாப்பு அதிகாரி கென் வோர்ஃப் மேலும் தெரிவித்துள்ளார்.பல மாதப் பிரதிபலிப்பு மற்றும் உள் விவாதங்களுக்குப் பின்னரே தாம் அரச குடும்பத்தின் முதன்மைப் பாத்திரத்தில் இருந்து விலகும் முடிவைத் தாம் எடுத்ததாக ஹரி மற்றும் மேகன் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தனர்.

இதேவேளை ராணி, இளவரசர் சார்ள்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சன்ட்ரிங்ஹமில் உள்ள மாளிகையில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக உரையாடிருந்தனர்.

எதிர்காலத்தில் பொதுநிதியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று ஹரி – மேகன் தம்பதி தீர்மானித்ததையடுத்து ராணி அவர்களது முடிவினை ஆதரித்துள்ளார்.

நன்றி express.co.uk
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.