பஞ்சாபி கண்டு நெகிழ்ந்த தமிழ் பொங்கல் விழா!!

தூத்துக்குடியில் பொதுமக்கள், காவல்துறை இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கலில் வயலில் ஏர்கலப்பை பிடித்து உழுது, பெண்களோடு நாற்று நட்டு அசத்தினார் சப் – கலெக்டர் சிம்ரான்.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பொங்கல் பண்டிகையின் பொழுது ஆண்டுதோறும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி தாமிரபரணி ஆற்றில் உள்ள மணலில் குடும்பத்தினர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். காலப்போக்கில் கருவேல மரங்களின் வளர்ச்சியால் மணல் பகுதி வெளியில் தெரியாமல் மறைந்தது.

தாமிரபரணி பாசனத்தின் கடைசி தடுப்பணையான இந்த ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் படகு குழாம், சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத வளர்ச்சி அடையாத நகரமாகக் காணப்பட்டது.

 அங்கு சப் – கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் அருகில் உள்ள வயலில் மாடு பூட்டி உழவு செய்தனர். பின்னர், பெண்களுடன் இணைந்து நெல் நாற்றுகளை நட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு புத்தாடை, கரும்பு வழங்கப்பட்டது.

இப்பொங்கல்விழா குறித்து சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் பேசுகையில், “பஞ்சாப் மாநிலம்தான் எனக்குச் சொந்த மாநிலம். அங்கேயும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 13-ம் தேதி `லோஹ்ரி’ எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குளிர்கால பயிர்களின் அறுவடையுடன் தொடர்புடையது. இக்காலம் கரும்பு அறுவடைக்கு ஏற்ற பருவமாகக் கருதப்படுகிறது. லோஹ்ரிக்கு அடுத்தநாள் கொண்டாடப்படுவதுதான் மகி. இது, பஞ்சாபில் விவசாயிகளால் நிதி புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளன்று சில பகுதிகளில் காற்றாடி பறக்கவிடுவார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.