பதுளைக் காட்டுக்குள் பெண்ணின் சடலம்!

பதுளை தல்தென பரகஸ்தென்ன பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


60 வயதான ஆர்.எம். ஹிம்மொனிக்கா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த கடந்த ஒரு மாதமாக காணாமல் போயிருந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டிலேயே அவரது சடலம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.