வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு குருணாகலை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக பணம் ஈட்டியமை, பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தமை மற்றும் கருத்தடை சிகிச்சை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் சாஃபிக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது, குருணாகலை ஆதார வைத்தியசாலையின் 76 தாதியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அவர்கள் அறிவித்தனர்.

அதேபோல், தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் வைத்தியர் சாபி பணி புரிந்த காலப்பகுதியில் சாபியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை முன்னோக்கி கொண்டு சென்று மீண்டும் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் 2 மாதங்கள் அவகாசம் பெற்றுத்தருமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் இதன்போது கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.