இலக்கிய காதலிலும்!!

உன் மூச்சுக் காற்றின் 
தோழமையோடு
என் சுதந்திரக் காற்றை 
சுவாசிக்க வேண்டும்..

சுதந்திர பறவையாய் 
வான வீதியில் பறக்க
நேசச் சிறகுகள் 
நீ தர வேண்டும்..

ஆண் என்ற அதிகாரம் களைந்த
நிராயுதபாணியாய்..
காதல் எனும் ஆயுதம் ஏந்திய 
அதிகாரியாய் நீ வேண்டும்.

என் மௌனங்களை 
நீ புரிய வேண்டும்..
உன் கோபங்களை 
நான் உணர வேண்டும்..
கஷ்டமே வந்தாலும் கலங்கிடாத 
உன் கர்வம் வேண்டும்..
உன் தலைசாயும் தோள்கள்
எனதாக வேண்டும்..

நிலா ஒழுகும் இரவிலும்
நிசப்தப் பொழுதிலும் 
என் கற்பனை உலகினுள்
காண்பதெல்லாம் கலைநயம் என்று
ரசித்திட வேண்டும்..

மாயை உலகில்
இலக்கிய காதலிலும் 
நவீன காதலிலும்
காணாத காதலை 
உன் காதலில் நான் காண வேண்டும்...
நீ நீயாகவும் 
நான் நானாவும் 
இந்தக் காதல் நமக்காக வேண்டும்...

-சங்கரி சிவகணேசன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.