மக்களின் பாவனைக்காக ராகலையில் பாலம் அமைக்கப்பட்டது!!

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் 01 தோட்ட மக்களின் பாவனைக்கு பாலம் ஒன்று இன்மையால் அம் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர்.


குறித்த பிரதேசம் அடிக்கடி வெள்ள பெருக்கில் பாதித்து வந்த நிலையில் தமக்கு பாலம் ஒன்றினை அமைத்து தருமாறுஅவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வந்திருந்தனர்.

இதற்கு தீர்வினை பெற்றுக் கொள்ள அவர்கள் முயற்சிகள் பல மேற்கொண்ட போதும் அவை பயனளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணனின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் பாலம் முழுமையாக நிர்மாணிக்கபட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வே.இராதாகிருஸ்ணன் சென்று கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.