உக்ரைன் விமானம் இயந்திரகோளாறாலே விழுந்து நொருங்கியது. 170 பேரும் உயிரிழப்பு.!📷

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 170 பேரும் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் நோக்கி புறப்பட்ட Boeing 737-800 ரகத்தை சேர்ந்த விமானம் ( பதிவிலக்கம்- 752 PS752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது ஈரான் - அமெரிக்கா போர் நிலைமையால் தாக்கப்பட்டதா? என சந்தேகம் நிலவியிருந்தது.
விமானத்தின் இன்ஜின்களில் ஒன்று தீ பிடித்ததால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர், விமானியால் அவசரநிலை குறித்து கட்டுப்பாட்டறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் தீ விபத்து என்ன காரணம் என்று தெரியவில்லை. கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் மீட்புப்பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Obozrevatel இணையத்தள தகவல்படி 73 Canadians, 71 Iranians, 3 Britons and several other Europeans பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்ததாக ஈரானிய ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன. தகவல் அறிந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேரும் உயிரிழந்தாக பின்னர் ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது என ஈரான் விமானப் போக்குவரத்துத்துறை செய்தித்தொடர்பாளர் ரெசா ஜஃபர்சாத் தெரிவித்தார்.
சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது. நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.