தலாத்து ஓயாவில் 10 பேர் பொலிஸாரால் கைது!

தலாத்து ஓயா, நெஹேத்திவெல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


4 கிராம் 542 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதை பொருள் விற்பனையால் கிடைத்தாக சந்தேகிக்கப்படும் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 350 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, அம்பிட்டிய, பேராதெனிய மற்றும் அமுனுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.