பனிக்கன்குளம் கிராமத்தைச்சேர்ந்த ஐம்பத்து எட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் உதவி!

இத்தாலி உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தின் பனிக்கன்குளம் கிராமத்தைச்சேர்ந்த ஐம்பத்து எட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கப்பட்டன.


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாங்குளம் பிரதேசப்பொறுப்பாளர் திரு.பிறேம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னணியின் முல்லை மாவட்டச்செயலாளர் திரு.கிந்துஜன், மாங்குளம் பிரதேச மனிதாபிமானத்துறைச்செயற்பாட்டாளர் திரு.ரூபன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்தாலியிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் இளையோர்களின்  நிதிசேகரிப்பில் இங்கு வசிக்கின்ற இளையோர்களுக்கான கற்றல் சார் உபகரணங்கள் வழங்கப்பட்டமை மிகமிக பெறுமதியான நிகழ்வாக கருதுகிறோம்.

இதற்காக இத்தாலி உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.