நீராவியடிக்கு பௌத்த மதகுருமார்கள் விஜயம்!!

சிங்கலே, ராவண பலய என்ற சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர்.


பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

குறித்த குழுவினர் நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் அங்கு சென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு, பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்படுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

கொழும்பில் இருக்கும் பௌத்த மதகுருமார்களைவிடவும் வடக்கு, கிழக்கில் வசிக்கும் மதகுரமார்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடு அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடு தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் இதன்போது தெரிவித்தார் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.